banner



How To Clear Kidney Stone In Tamil

சிறுநீரக கல் இருக்கா, இதை ஃபாலோ பண்ணுங்க வலி குறைஞ்சு கல் வெளியேறும்!

| Samayam Tamil | Updated: Oct 16, 2020, 4:20 PM

வலி மிகுந்த கற்கள் சிறுநீரகத்தில் உருவாகும் போது சிறுநீரகத்தின் பணிகள் பாதிப்பை சந்திக்கிறது.


உடல் கழிவுகளை வெளியேற்று சிறுநீரகம் சீராக தடங்கலில்லாமல் செயல்படும் வரை உடல் ஆரோக்கியத்திலும் குறைபாடு இல்லை. ஆனால் சிறுநீரகங்களில் கனமான தாது உப்புகள் தேங்கி அங்கேயே நிற்பதை சிறுநீரக கற்கள் என்று அழைக்கிறார்கள். இந்த கற்கள் உண்டாக்கும் வலியும், உபாதையும் தீவிரமானவை. இதற்கு மருந்துகள் எடுத்துகொள்ளும் போது மேலும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் இருக்க உடலை அதிக நீரேற்றமாக வைத்திருக்கவும் வேண்டும்.

அப்போதுதான் உடலில் இருக்கும் நச்சுக்கள் தாராளமாக வெளியேறுவதோடு சிறுநீர் கற்களையும் நகர்த்த உதவும். அப்படி நீங்கள் எடுத்துகொள்ள வேண்டிய பொருள்களை தான் பார்க்கபோகிறோம். மிகச்சிறிய அளவில் இருக்கும் சிறுநீரக கற்கள் என்றால் அவை வெளியேறுவதற்கான வாய்ப்பு பெருமளவு உண்டு. அதே நேரம் அதிக வலி மிகுந்த சிறுநீரக கற்களாக இருந்தால் அதை இந்த வைத்தியத்தின் மூலம் வெளியேற்றிவிட முடியும் என்று நினைக்காமல் மருத்துவரின் அறிவுரையோடு இதை முயற்சிப்பது தான் பாதுகாப்பானது.

​மிக அதிக தண்ணீர்

தண்ணீர் எப்போதும் அதிகமாக எடுத்துகொள்கிறேன் என்று சொல்பவர்கள் கூட வழக்கத்தை காட்டிலும் கூடுதலாக தண்ணீர் குடிக்க வேண்டும். சிறுநீரக கல் வெளியேறுவதை ஊக்குவிப்பதில் தண்ணீருக்கு அதிக பங்குண்டு. அதனால் வழக்கத்தை காட்டிலும் கூடுதலாக இதை முயற்சி செய்யுங்கள்.

சிறுநீரக கல்: ஆரம்பமும் அறிகுறியும் பிரச்சனைகளும் தீர்வுகளும்

அதற்காக மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டியதில்லை. நீரிழப்பு என்பது சிறுநீரக கற்கள் கொண்டிருப்பவர்களுக்கு ஆபத்துகளை விளைவிக்கும். அதனால் அதிக நீரேற்றத்தோடு இருப்பது நல்லது. இல்லையெனில் இவையும் இணைந்து உபாதையை அதிகமாக்கும். சிறுநீரக கல் இருப்பது உறுதியானால் சிறுநீரகம் போகும் போது அதன் அடர்த்தியும் கவனிக்க வேண்டும். வெளிமஞ்சளாக இருந்தால் சரி. அடர் மஞ்சள் நிறமாக இருந்தால் அது சிறுநீர் இழப்பின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

​எலுமிச்சை சேர்த்த நீர்

எலுமிச்சையில் இருக்கும் சிட்ரேட் உள்ளது, இது சிறுநீரகத்தில் கால்சியம் கற்கள் உருவாகாமல் தடுக்கிறது. அதோடு எலுமிச்சையில் இருக்கும் சிட்ரேட் ஆனது சிறுநீரகத்தில் இருக்கும் சிறிய கற்களை உடைத்து அதிக நீரேற்றத்தில் எளிதாக வெளியேற்ற முயற்சிக்கும். மிகப்பெரிய சிறுநீரக கல் இருக்கும் போது காட்டிலும் சிறிய அளவில் இருக்கும் போது எலுமிச்சை சேர்த்த நீர் சிறந்த நன்மைகளை உருவாக்கும்.

எலுமிச்சை சேர்த்த நீரை நாளில் இரண்டு அல்லது மூன்றூ முறை குடித்துவருவதன் மூலம் சிறுநீரக கல் வெளியேறுவதோடு வைட்டமின் சி வழங்கவும் செய்கிறது. உடலுக்கு எதிர்ப்பு சக்தி தந்து கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்கவும் உதவுகிறது.

​துளசி தேநீர்

நீரிழிவு, ரத்த அழுத்தம், சிறுநீரக கற்கள் போன்றவற்றுக்கு துளசி தேநீர் தரும் நன்மைகள் குறித்து இன்னும் விரிவான ஆய்வு தேவைப்படுகிறது. எனினும் துளசி ஆக்ஸிஜனேற்றி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டிருப்பதால் இது நன்மைகள் தருகிறது என்பதையும் ஒப்புகொள்ள வேண்டும். துளசி சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க செய்யும்.

துளசியில் இருக்கும் அசிட்டிக் அமிலமானது சிறுநீரக கற்களை உடைக்க செய்யும். வலி உபாதையை குறைக்க செய்யும். தினமும் தேநீர் குடிக்க விரும்பும் போதெல்லாம் உலர்ந்த துளசி இலைகளை கொண்டு தேநீர் தயாரிக்கலாம். துளசி இலைகளை சிறுநீரக கல் வெளியேற பயன்படுத்தலாம் என்றாலும் தொடர்ந்து 21 நாட்களுக்கு மேல் பயன்படுத்தகூடாது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

​ஆப்பிள் சீடர் வினிகர்

ஆய்வு ஒன்றில் ஆப்பிள் சீடர் வினிகர் சிறுநீரக கற்கள் குறைப்பதில் உதவுவதில் பயனளித்தது என்றாலும் இது குறித்த ஆய்வுகள் இன்னும் தேவைப்படுகிறது. அதே நேரம் இதை எடுத்துகொள்வதால் உடலுக்கு ஆபத்து நேராது. நன்மைகளை உண்டாக்கும்.

ஆப்பிள் சீடர் வினிகரில் அசிட்டிக் அமிலம் இருப்பதால் இது சிறுநீரக கற்களை கரைக்க செய்கிறது. மேலும் சிறுநீரக கற்களால் உண்டாகும் வலியையும் இவை குறைக்க உதவுகிறது.

ஆப்பிள் சீடர் வினிகர் 2 டீஸ்பூன் அளவு மட்டும் எடுத்து நீரில் கலந்து அவ்வபோது குடித்துவந்தால் பலன் கிடைக்கும். நீரிழிவு இருப்பவர்கள் இதை சுயமாக முயற்சி செய்யாமல் மருத்துவரின் ஆலோசனை பெற்று பயன்படுத்துவது அவசியம்.

​மாதுளை சாறு

மாதுளை பூ, பிஞ்சு எல்லாமே காலங்காலமாக மருத்துவத்தில் பயன்படுத்திய பொருள்களே. மாதுளைசாறு உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றுவதில் உதவி செய்யும். இது ஆக்ஸிக்ஜனேற்றம் நிறைந்த பானம். உடலில் இருக்கும் உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. சிறுநீரகங்களையும் ஆரோக்கியமாக வைத்திருக்க செய்கிறது. மாதுளையை அதிகம் சேர்ப்பவர்களுக்கு சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்கப்படுகிறது.

கிட்னி ஸ்டோன்: ஆபத்தில்லாம ஈஸியா வெளியே வரணும்னா இதை சாப்பிடுங்க...

ஏனெனில் சிறுநீரின் அமிலத்தன்மை குறைத்து கற்கள் வராமல் தடுக்க செய்யும் குணங்களை மாதுளை கொண்டிருக்கிறது. குறைந்தது கற்கள் உருவாகும் அபாயத்தை தடுக்க செய்கிறது. ரத்த அழுத்தம், குறிப்பிட்ட சில மருந்துகள் எடுத்துகொள்பவர்கள், கல்லீரல் பிரச்சனை கொண்டிருப்பவர்களை தவிர்த்து மற்றவர்கள் மாதுளை சாறு குடிக்கலாம்.

இவை தவிர இன்னும் பல திரவங்களை சிறுநீரக கற்கள் குறைப்பதற்கு பயன்படுத்துகிறார்கள் என்றாலும் மேற்கண்டவை எல்லாம் நம் வீட்டிலேயே எளிதாக இருக்க கூடியவை என்பதோடு அவை உடல் ஆரோக்கியத்துக்கும் உதவக்கூடியவையே. மருத்துவ பரிசோதனையின் மூலம் சிறுநீரககற்களை கரைத்து வெளியேற்றலாம் என்று சொல்லும் போது இந்த குறிப்புகள் உங்களுக்கு நிச்சயம் பலனளிக்கும்.

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்

இந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்

Web Title : how to remove kidney stones and reduce pain naturally at home
Tamil News from Samayam Tamil, TIL Network

How To Clear Kidney Stone In Tamil

Source: https://tamil.samayam.com/lifestyle/home-remedies/how-to-remove-kidney-stones-and-reduce-pain-naturally-at-home/articleshow/78700408.cms#:~:text=%E2%80%8B%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D,%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.

Posted by: skellyimation.blogspot.com

0 Response to "How To Clear Kidney Stone In Tamil"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel